வேலூர் சரகத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் இடமாற்றம்
வேலூர் சரகத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூர் சரகத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
வேலூரில் பணியாற்றி வரும் சீனிவாசன் ராணிப்பேட்டைக்கும், திருவள்ளூரில் பணியாற்றி வரும் நாகராஜன் வேலூருக்கும், குடியாத்தத்தில் பணியாற்றிவந்த செல்லபாண்டியன் வாணியம்பாடிக்கும், வாணியம்பாடியில் பணியாற்றிவந்த கமலக்கண்ணன் அரக்கோணத்துக்கும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பணியாற்றிவந்த பரந்தாமன் சத்துவாச்சாரிக்கும், ராணிப்பேட்டையில் பணியாற்றி வந்த முகேஷ்குமார் காட்பாடிக்கும், காட்பாடியில் பணியாற்றி வந்த ராஜேந்திரன் திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி குடியாத்தத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு பிறப்பித்துள்ளார்.