விஷம் குடித்து மாணவி தற்கொலை

சுமைதாங்கியில் விஷம் குடித்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-01-08 18:02 GMT
காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பாகவெளி பெரிய தெருவைச் சேர்ந்தவர் ஆயம்மா. இவரது உறவினர் மகள் ஆனந்தி (வயது 16), வாலாஜாவிலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவருடைய பெற்றோர் கடந்த 15-வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் ஆனந்தியை உறவினரான ஆயம்மா வளர்த்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டு வேலை செய்யவில்லை என ஆயம்மா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்த ஆனந்தி வீட்டில் இருந்த விஷமருந்தை எடுத்து குடித்துள்ளார்.

மயக்க நிலையில் இருந்த ஆனந்தியை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது ஆனந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து ஆனந்தியின் உறவினர் செல்வராஜ் (75) நேற்று காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்