விஷப்பூச்சி கடித்து மூதாட்டி பலி
திருப்புல்லாணி அருகே விஷப்பூச்சி கடித்து மூதாட்டி பலியானார்.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி அருகே மேலவலசை கிராமத்தை சேர்ந்த கணேசன் மனைவி ராமு (வயது 72). வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு வலது கை மணிக்கட்டு பகுதியில் விஷப்பூச்சி கடித்துள்ளது. வலி அதிகமாகி மயக்கம் வந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஆரிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.