தொழிலாளர்களின் 8 வீடுகள் எரிந்து சாம்பல்
தொழிலாளர்களின் 8 வீடுகள் எரிந்து சாம்பல்
வால்பாறை
வால்பாறை தனியார் நிறுவன காபித் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் அடுத்தடுத்து தீ பிடித்தது. வீட்டை விட்டு வெளியே ஒடி வந்த தொழிலாளர்கள் மீண்டும் வீடுகளுக்குள் சென்று பொருட்களை எடுக்க முயற்சிப்பதற்குள் தீ அனைத்து வீடுகளிலும் பற்றி எரிந்தது.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் வீடுகளில் இருந்த மின் சாதன பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் கட்டில், பீரோ, நகை, பணம், துணிகள் பல்வேறு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் என்று அனைத்துமே எரிந்து சாம்பலானது.
இந்த தீவிபத்தில் தோட்ட தொழிலாளர்கள் ராஜேந்திரன், தனம், நடராஜ், சுரேஷ், ஒஞ்சனலி, நிஜாம் அலி, மாலாஉசேன், கனகா ஆகியரது 8 வீடுகள், வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் சங்கீதா சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டார்.