காரைக்கால் கலெக்டர் அலுவலகம் முன் கைகுழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

காரைக்கால் கலெக்டர் அலுவலகம் முன் கைகுழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-08 16:49 GMT
காரைக்கால், ஜன.
காரைக்கால் பிள்ளை தோட்டத்தை சேர்ந்த சுரேஷ் (38), நாயக்கன் குளத்துமேட்டு வீதி சுரேஷ்குமார் (39), முல்லைநகர் தங்கதுரை (38) ஆகியோரை மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர். அவர்களது  தகவலின்பேரில் அக்கரைவட்டம் மாதாகோவில் தெருவை சேர்ந்த சங்கர் (32) என்பவர் வீட்டில் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கனவே திருட்டு வழக்கு இருந்ததால் நேற்று முன்தினம் சங்கரை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் காரைக்கால் கலெக்டர் அலுவலகத்துக்கு தனது 9 மாத பெண் குழந்தையுடன்  சங்கர் மனைவி சோபியா நேற்று காலை வந்தார். தனது கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி குழந்தையுடன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றார்.  இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து சோபியா, கைகுழந்தை மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்