கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

கோவில்பட்டியில் நேற்று குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-08 15:54 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி மெயின் ரோடு ராஜமீரா கோல்டு சந்திப்பில், நடராஜபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள 9 தெருவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், நகரசபை பொறியாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்கள் நடராஜபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள 9 தெருக்களில் உள்ள வீடுகளுக்கும், பொது குழாய்களுக்கும் பல மாதங்களாக குடிநீர் சீராக வினியோகம் செய்யவில்லை. இதை சரிசெய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

அதற்கு அதிகாரிகள், நாளை (திங்கட்கிழமை) நடராஜபுரம் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களுக்கும், குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்