பழனியில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

பழனியில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-01-08 14:24 GMT
பழனி:
பழனி முருகன் கோவிலில் வருகிற 12-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் தரிசன தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
எனினும் பழனியில் தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பக்தர்கள் ஒருவழி பாதையில் மலைக்கோவிலுக்கு செல்லும் குடமுழுக்கு அரங்கு பகுதிகளில் நிழற்பந்தல் போடும் பணி நடக்கிறது. இதேபோல் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்