எல்லை பாதுகாப்புப்படை வீரர் மாயமான வழக்கு
எல்லை பாதுகாப்புப்படை வீரர் மாயமான வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
நெல்லையைச் சேர்ந்த சுதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் ரமேஷ். எல்லை பாதுகாப்பு படைப் பிரிவு போலீஸ்காரராக கொல்கத்தாவில் பணி யாற்றுகிறார். விடுப்பில் கடந்த ஆண்டு ஊருக்கு வந்தார். பின்னர் இங்கிருந்து சென்ற அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர், வந்து ேசரவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. என் கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜி.ஜெயசந்திரன் ஆகியோர் விசாரித்தனர். இதுகுறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.