வீடுகளை கழிவுநீர் சூழ்ந்ததால் மருந்து பாட்டில்களை சாலையில் போட்டு பொதுமக்கள் மறியல்
வீடுகளை கழிவுநீர் சூழ்ந்ததால் மருந்து பாட்டில்களை சாலையில் போட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் குடைபாறைபட்டி அருகே அந்தோணியார் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதையொட்டி சாலையோரத்தில் பிரதான சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. இந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி வீடுகளை சூழ்ந்து விட்டது.
மேலும் மழைக்காலத்தில் கழிவுநீருடன், மழைநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தினர். எனினும் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் கழிவுநீர் சூழ்ந்ததால் நோய் தொற்று ஏற்பட்டு மக்கள் சிகிச்சை பெறுவதை கூறும் வகையில் காலி மருந்து பாட்டில்களை சாலையில் போட்டு போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ், கார், மோட்டார் சைக்கிள்கள் என அனைத்து வாகனங்களும் சாலையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.