சுரண்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சுரண்டை:
சுரண்டை அண்ணா சிலை அருகில் பா.ஜ.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்காத அந்த மாநில அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமராஜா, மாவட்ட செயலாளர் அருள்செல்வன், நகர தலைவர் அருணாசலம், தொழில் அதிபர் கோதை மாரியப்பன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.