மாணவிக்கு தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபரை கைது செய்தனர்
கடையம்:
கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசிங் மகன் வினோத் என்ற வினோத்குமார் (வயது 22). இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் செல்போன் நம்பரை கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வினோத்தை கைது செய்தனர்.