நாங்குநேரியில் ‘லிப்ட்’ கேட்டு சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மாற்றுத்திறனாளி இறந்தார்

Update: 2022-01-07 21:49 GMT
நாங்குநேரி:
நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சி லைன் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 50). ஒரு கை இழந்த மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் நாங்குநேரியில் இருந்து மறுகால்குறிச்சி செல்வதற்காக, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் ‘லிப்ட்’ கேட்டு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த சங்கரன் தலையில் பலத்த காயமடைந்தார்.
உடனே அவருக்கு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சங்கரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சங்கரனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்