கண்மாயில் மூழ்கி தொழிலாளி பலி

கண்மாயில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-01-07 20:39 GMT
வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியை சேர்ந்த மொட்டையன் மகன் மகுடீஸ்வரன் (வயது 55). துப்புரவு தொழிலாளி. இவர் குட்லாடம்பட்டி ஊராட்சியில் தற்காலிக பணியாளராக பணி செய்து வந்தார். அங்குள்ள கண்மாய் கரையில் இவரது வீடு உள்ளது. இதனால் தினந்தோறும் கண்மாயில் சென்று துவைத்து குளிப்பது வழக்கம்.அதுபோல் நேற்று குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி உள்ளே விழுந்தார். இதில் அவரால் எழுந்து வர முடியததால் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்