அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

காங்கேயம் தாசில்தார் அலுவலகம் முன்பு தோட்டக்கலை துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-07 18:36 GMT
காங்கேயம்
காங்கேயம் தாசில்தார் அலுவலகம் முன்பு தோட்டக்கலை துறை ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் 
 வெள்ளகோவில் துரைசாமி நகரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 29). இவர்  வெள்ளகோவில் உதவி தோட்டக்கலை துறை அலுவலராக பணிபுரிந்து வந்தார்.  திருமணமாகி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களாக கடுமையான பணிச்சுமை இருந்ததாகவும், இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கேயம் அருகே செம்மாண்டம் பாளையம் பகுதியில் லோகேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  இதற்கிடையில் பணிச்சுமை காரணமாகவே லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறி காங்கேயம் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மதியம் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் 4 பேர் செய்ய வேண்டிய வேலையை லோகேஷ் ஒருவரே செய்து கொண்டிருந்ததாகவும், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்