மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்புபோராட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்புபோராட்டம்
வேலூர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் உமா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில துணைதலைவர் ரஞ்சன்தயாளதாஸ் கோரிக்கை குறித்து பேசினார்.
வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது பிறதுறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போன்று பணி மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலக அதிகாரியை சந்தித்து கோரிக்கை தொடர்பான மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.