காரில் கடத்தி வந்த சாராயம் பறிமுதல்-வாலிபர் கைது

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் கடத்தி வந்த சாராயத்தை பறிமுதல் செய்து ஒருவரை போலீசாா் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-01-07 17:52 GMT
சீர்காழி:
காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் கடத்தி வந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுதொடர்பாக  மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சாராயம் பறிமுதல்-ஒருவர் கைது
சீர்காழி அருகே காரைக்கால் - சிதம்பரம் சாலையில் பூந்தாழை என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு சீர்காழி மதுவிலக்கு போலீசார் சுரேஷ், ஆனந்த், நாராயணசாமி உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 250 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது. 
 இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் காரைக்கால் மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்த கிளமெண்ட் (வயது 33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த சுரேஷ், காரைக்கால் சேத்தூர் பகுதியை சேர்ந்த லூர்துசாமி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்