குள்ளஞ்சாவடி அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
குறிஞ்சிப்பாடி,
குள்ளஞ்சாவடி அருகே உள்ள அப்பியம்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் ஜெயசூர்யா (வயது 19). திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ஜெயசூர்யா நேற்று காலை தனது நண்பர்கள் சிலருடன் கட்டியங்குப்பம் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெயசூர்யா திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.