கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் எதிரொலி: தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2022-01-07 17:11 GMT
பர்கூர்:
கொரோனா கட்டுப்பாடுகள்
கிருஷ்ணகிரி கர்நாடக, ஆந்திர மாநிலங்களையொட்டி அமைந்துள்ள மாவட்டமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்ததையடுத்து மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார். 
அதன்படி தமிழக எல்லை பகுதிகளான ஓசூர் ஜூஜூவாடி சோதனைசாவடி மற்றும் குருவிநாயனப்பள்ளியை அடுத்த ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள காளிக்கோவில் சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை
காளிக்கோவில் சோதனைச்சாவடி வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோரை நிறுத்தி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 
மேலும் அத்தியாவசிய தேவையின்றி சுற்றுபவர்களை திரும்பி அனுப்பியும், முககவசம் அணியுமாறும் அறிவுறுத்தினர். 
இதேபோல ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் வருவோரையும் நிறுத்திய போலீசார், உரிய காரணங்களுடன் செல்கின்றனரா? என விசாரித்தனர். கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என மொபைல் ஆப்பில் பரிசோதித்து, தடுப்பூசி போடாதவர்களை உடனடியாக தடுப்பூசி போடுமாறும், அரசின் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்