பெண் கவுன்சிலரை கொடுமைப்படுத்திய கணவர் கைது

கடமலைக்குண்டுவில் ஒன்றிய பெண் கவுன்சிலரை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-07 16:43 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்தின் 5-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் உமாமகேஸ்வரி (வயது 36). இவரது கணவர் வேல்முருகன் (43). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் தற்போது கடமலைக்குண்டுவில் வசித்து வருகின்றனர். 
இந்தநிலையில் உமாமகேஸ்வரி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2 ஆண்டுகளாக வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தனது குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்து வருகிறார். 
இதனை தட்டிக்கேட்ட என்னை அடித்து கொடுமைப்படுத்தியதுடன், கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரதிகலா வழக்குப்பதிந்து, வேல்முருகனை கைது செய்தார். 

மேலும் செய்திகள்