காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

காரிமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் தி்வ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-01-07 16:40 GMT
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் தி்வ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு ‌செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், தமிழ்ச்செல்வி நந்திசிவம், ராதிகா காசிராஜன், ஊராட்சி செயலாளர்கள் முருகன், குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து பெரியாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விவரங்கள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பெரியாம்பட்டி சுகாதார பூங்காவை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பூங்காவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விரைந்து முடிக்க வேண்டும்
இதைதொடர்ந்து பெரியாம்பட்டி, பைசுஅள்ளி, கோவிலூர், இண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம், ஹாலோபிளாக் கற்கள் பதிக்கும் பணி, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட சாலை அமைக்கும் பணிகள், சுகாதார மையம் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திட்டப்பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்