கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சோதனை சாவடியில் கலெக்டர் ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே கணவாய் பகுதியில் வாகன சோதனை சாவடி உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார். வாகன பதிவேடு, மருத்துவ பரிசோதனை, மருத்துவ குழுவினர் எண்ணிக்கை, கொரோனா பரிசோதனை பதிவேடு ஆகிய விவரங்களை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை, க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையம், படுக்கைகள் எண்ணிக்கை, ஆக்சிஜன் வசதி குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து ஆண்டிப்பட்டி ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
முன்னதாக குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்ததோடு, ஆண்டிப்பட்டியில் திடீர் வாகன தணிக்கை செய்து, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மாவட்ட சுகதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.