கொடைரோடு அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற அண்ணன், தம்பி வேன் மோதி பலி பக்தர்கள் கண்முன் பரிதாபம்
கொடைரோடு அருகே, பழனிக்கு பாதயாத்திரை சென்ற அண்ணன், தம்பி பக்தர்கள் கண் முன் வேன் மோதி பலியானார்கள்.
கொடைரோடு:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் கடுக்காய்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்கள் பாலமுருகன் (வயது 36). கொத்தனார். முத்துராஜ் (30). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர்கள் உள்பட கடுக்காய்குளம் கிராமத்தை சேர்ந்த 22 பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். நேற்று அதிகாலையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பள்ளபட்டிபிரிவு அருகே 4வழிச்சாலையில் பாதயாத்திரையாக நடந்து வந்து கொண்டு இருந்தனர்.
அண்ணன்-தம்பி சாவு
அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு வேன் பாதயாத்திரையாக நடந்துவந்த பாலமுருகன், முத்துராஜ் ஆகியோர் மீது மோதியது. இ்தில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய வேன் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. பாதயாத்திரை பக்தர்கள் கண்முன் நடந்த இந்த துயர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் விபத்தில் இறந்த பாலமுருகன், முத்துராஜ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமரா
இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வேனை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் 4 வழிச்சாலையில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வேன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள். பழனிக்கு பாதயாத்திரையாக வந்த அண்ணன், தம்பி வேன் மோதி இறந்தது கொடைரோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.