திருவள்ளூர் நகராட்சியில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்; நகராட்சி கமிஷனர் நடவடிக்கை

திருவள்ளூர் நகராட்சியில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு நகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.

Update: 2022-01-07 15:27 GMT
அபராதம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நகராட்சி ஆணையர் கொண்டமாபுரம் தெரு, பஜார் வீதி முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முககவசம் அணியாமலும், உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தார்.

எச்சரிக்கை

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார். மீறுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் சி.வி. ரவிச்சந்திரன் எச்சரித்தார்.

இந்த ஆய்வின்போது அவருடன் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர், மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்