கோவை
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
8 மணி நேர வேலை, வார விடுமுறை வழங்கி பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளர் நல சட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ.) கோவை பாலசுந் தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்று கையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு திருத்தியதை கண்டித்து கோஷமிட்டனர்.