குமரிக்கு வந்த வாலிபருக்கு ஒமைக்ரான் அறிகுறி
குமரிக்கு வந்த வாலிபருக்கு ஒமைக்ரான் அறிகுறி
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டம் வந்த தக்கலையை சேர்ந்த வாலிபருக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து அந்த வாலிபர், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.