சிமெண்டு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது
குன்னம் அருகே சிமெண்டு லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). டிரைவரான இவர் நேற்று காலை அரியலூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிமெண்டு 34 டன் சிமெண்டு லோடு ஏற்றப்பட்ட டேங்கர் லாரியை ஓட்டி வந்தார். குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலையில் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட தார்சாலையில் லாரியை ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நாய் வந்ததால் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ராதாகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.