கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தற்கொலை
ஏற்காடு தனியார் விடுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கொழுந்தனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்காடு:-
ஏற்காடு தனியார் விடுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கொழுந்தனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 குழந்தைகளின் தாய்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன்கள் பிரபு, விஜய் (வயது 30). பிரபுவுக்கு திருமணம் ஆகி மஞ்சு (26) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், தனது அண்ணி மஞ்சுவுடன் விஜய் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இரவில் விஜய் மது அருந்தியதாக தெரிகிறது. இதனிடையே அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒன்றாக தூங்கினர்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் விஜய், கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது படுக்கையில் மஞ்சுவை காணவில்லை. அவர் கழிவறை சென்று இருக்கலாம் என நினைத்து விஜய் இருந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் மஞ்சு வராததால், கழிவறை கதவை உடைத்து பார்த்துள்ளார். அங்கு நிர்வாண நிலையில் மஞ்சு தூக்கில் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தூக்கில் இருந்து மஞ்சுவை இறக்கி கட்டிலில் படுக்க வைத்து, துணிகளை போர்த்தி விட்டு, தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்காததால், மஞ்சு இறந்து விட்டதை அறிந்த விஜய், இது குறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விடுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மஞ்சுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன்கள் பிரபு, விஜய். பிரபுவின் மனைவி மஞ்சு. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வேலைக்காக பிரபு வெளிநாடு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து பிரபுவின் பெற்றோர் மற்றும் தம்பி விஜய் என அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
கள்ளக்காதல்
இந்த நிலையில் கணவர் வெளிநாட்டுக்கு சென்றதால் தனிமையில் இருந்த மஞ்சுவுக்கு தனது கொழுந்தன் விஜய்யுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 பேரும் நெருங்கி பழகி உள்ளனர். இதுவே அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறி விட்டது. இதன் காரணமாக அவர்கள் வீட்டில் இருந்து வெளியூர்களுக்கு சென்று அங்கு உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் அடிக்கடி ஏற்காட்டுக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு சென்ற பிரபு சொந்த ஊருக்கு திரும்பினார். பின்னர் அவர் தனது மனைவி மஞ்சு, குழந்தைகளுடன், கச்சாராபாளையத்தில் தனிக்குடித்தனம் சென்று விட்டார். அங்கு அவர் விவசாயம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார். எனினும் மஞ்சுவும், விஜய்யும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
கடும் வாக்குவாதம்
இதனிடையே விஜய்க்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த மஞ்சு, இனி விஜய் தன்னுடன் வரமாட்டார் என கருதினார். இது தொடர்பாக பேசி முடிவெடுக்க விஜய், மஞ்சு ஆகியோர் ஏற்காட்டுக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இரவில் விஜய் மது அருந்தி உள்ளார். பின்னர் 2 பேரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அதன்பிறகு மஞ்சு, தனது கொழுந்தனிடம் நீ என்னுடன் தான் இருக்க வேண்டும். நாம் இதே போன்று அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருக்கலாம். நீ யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்ததாக தெரிகிறது.
இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நீ எனது அண்ணனுடன் குடும்பம் நடத்து, நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது உறுதி என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மஞ்சு மனவருத்தம் அடைந்ததாக தெரிகிறது. பின்னர் இருவரும் தூங்கி விட்டனர்.
கொலை செய்யப்பட்டாரா?
தொடர்ந்து அதிகாலையில் மஞ்சு கழிப்பறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும் அவர் தூக்கில் நிர்வாண நிலையில் இருந்ததால் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.