1,119 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
விருதுநகரில் 1,119 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
விருதுநகர்,
தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ெகாரோனா தடுப்பூசி போட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 3-ந் தேதி முதல் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று விருதுநகர் கே.பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்ட 1,119 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் சந்திரமோகன் செய்திருந்தார்.