மேலும் ஒருவர் சாவு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த வல்லம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனா். இந்தநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சள் ஓடைபட்டியை சேர்ந்த முனியசாமி (வயது 46) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், கவுசல்யா, கார்த்திக் கண்ணன், கவிராஜ் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.