முதியவர் தற்கொலை

நெல்லையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-06 19:17 GMT
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் முத்துமாலை (வயது 70). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட முத்துமாலை நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்