தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-01-06 18:19 GMT
சுகாதார சீர்கேடு சீரமைக்கப்பட்டது
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழியில் அரசு ஊர் புற நூலகம் உள்ளது. இந்த நூலகத்தையொட்டி ஒரு பொது கழிவறை உள்ளது. அந்த கழிவறையின் தொட்டியில் (செப்டிக்டேங்) இருந்து கழிவுகள் வெளியேறி துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியேறிய கழிவுகளை அகற்றி, அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 
ஆபத்தான நிலையில் நீர்தேக்க தொட்டி
தெங்கம்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட உடையப்பன் குடியிருப்பு பகுதியில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியின் தூண்கள் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த தொட்டியை சுற்றிலும் பல வீடுகள் உள்ளன. மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர்தேக்க தொட்டியின் உறுதி தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா? 
                                                 -கண்ணன், உடையப்பன்குடியிருப்பு.
தொற்று அபாயம்
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் தனியார் வங்கியின் அருகில் கழிவுநீர் ஓடையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், ெகாசு உற்பத்தி அதிகமாகி  ெதாற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                           -புகழேந்தி, ஆரல்வாய்மொழி.
சீரான குடிநீர் தேவை
பூதப்பாண்டி பேரூராட்சியில் 1-வது வார்டில் நன்றிகுழி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் சீராக வருவதில்லை. இதனால், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சீராக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                              -எம்.சமியன்பிள்ளை, காயிதேமில்லத்நகர்.
சாலையில் நடமாடும் கால்நடைகள்
நாகர்கோவில், கோட்டார் பகுதியில் சாலையில் கால்நடைகள் நடமாடுகின்றன. இவை பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவதால் வாகனங்களில் செல்கிறவர்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, கால்நடைகள் சாலையில் நடமாடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                -சித்தார்த்தன், தாமரைகுளம். 
சாலையில் பாயும் கழிவுநீர்
பூதப்பாண்டி அருேக திட்டுவிளையில், கிதாயத்துநகரில் சாலையில் கழிவு நீர் பாய்ந்து செல்கிறது. இந்த சாலையோரம் குடிநீர் குழாய் உள்ளது. அதையொட்டி சாக்கடை பாய்ந்து செல்வதால் குடிநீர் பிடிக்க செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையில் கழிவுநீர் பாய்ந்து செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                             -அசீம், திட்டுவிளை.
பஸ் இயக்க வேண்டும்
நாகர்கோவிலில் இருந்து மலைப்பகுதியான மாறாமலைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மாறாமலை அப்பர் வரை சென்று வந்தது. இதன்மூலம் அந்த பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாறாமலையில் சாலை மிகவும் மோசமானது. அதன்பின்பு இந்த பஸ் இயக்கப்படவில்லை. எனவே, தொழிலாளர்கள் நலன்கருதி சாலையை சீரமைத்து நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                            -ஜினோ, தடிக்காரன்கோணம்.

மேலும் செய்திகள்