திருப்புவனம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா
திருப்புவனம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருப்புவனம்,
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவுவதால் தமிழக அரசு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்து உள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அறிவித்து உள்ளது. இந்தநிலையில் திருப்புவனம் நகர் பகுதிகளில் 3 பெண்கள், 1 ஆண் மற்றும் 1 குழந்தை என மொத்தம் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்த நபர்கள் வசிக்கும் பகுதிகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் பார்வையிட்டு கிருமி நாசினி தெளித்து, சுண்ணாம்பு பவுடர் போட்டும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.