ஓசூரில் பஞ்சாப் முதல்-மந்திரி உருவப்படம் தீ வைத்து எரிப்பு-பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் திடீர் பரபரப்பு

ஓசூரில் பா.ஜனதா கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தில், பஞ்சாப் முதல்-மந்திரி உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-06 17:46 GMT
ஓசூர்:
பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா இளைஞரணி சார்பில், ஓசூரில் நேற்று ராம்நகர் அண்ணா சிலையருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மஞ்சுநாத் குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பா.ஜனதா. தலைவர் நாகராஜ் கண்டனம் தெரிவித்து பேசினார். இதில், மாவட்ட செயலாளர் சீனிவாசன், கிழக்கு மண்டல தலைவர் பிரவீன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் உருவப்படத்தை, பா.ஜனதா கட்சியினர் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்