‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய மின்கம்பம் வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் கிராம சாலையில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் கீழ் பகுதி முதல் மேற்பகுதி வரை சிமெண்டு காரை பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் நிலவுகிறது. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான மின்கம்பத்தினால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மன்னம்பந்தல் கிராமமக்கள், மயிலாடுதுறை.
கால்நடை ஆஸ்பத்திரி செயல்படுமா?
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வந்தது. 12-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் கால்நடை சிகிச்சைக்காக இந்த ஆஸ்பத்திரியை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக கால்நடை ஆஸ்பத்திரி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் நோய்வாய்ப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட நோய்கள் அதிகளவில் பரவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செல்லூர் கிராமத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-சந்துரு, திருக்களம்பூர்.
ஆபத்தான மின்கம்பம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே காஞ்சிவாய் பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி மின்கம்பம் சாலையோரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகளும் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், குத்தாலம்.