வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ரூ 28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ரூ 28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Update: 2022-01-06 16:50 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில்  உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற பருத்தி சந்தையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 245 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உற்பத்தி செய்த பொட்டு ரக பருத்தி 549 மூட்டைகள், எல்.ஆர்.ஏ.ரக பருத்தி மூட்டைகள் 540 என மொத்தம் 1,089 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி குவிண்டால் ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.10,989, குறைந்த பட்சவிலை ரூ.8,891-க்கும், பொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று அதிகபட்ச விலை ரூ.6,405, குறைந்தபட்ச விலை 4,719-க்கும் ஏலம் போனது. ஆக மொத்தம் ரூ.27 லட்சத்து 99 ஆயிரத்துக்கு விற்பனையானது. திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள்  பருத்தி முட்டைகளை வாங்கி சென்றனர். 

மேலும் செய்திகள்