நடுவட்டம் அருகே நடுரோட்டில் கவிழ்ந்த மினி வேன்
நடுவட்டம் அருகே நடுரோட்டில் கவிழ்ந்த மினி வேன்
கூடலூர்
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதையில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டியில் இருந்து நேற்று பகல் 1 மணிக்கு பலவகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று கூடலூர் வந்து கொண்டிருந்தது.
நடுவட்டம் அருகே உள்ள டி.ஆர்.பஜார் பகுதியில் வந்தபோது திடீரென மினி வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் நடுரோட்டில் விழுந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கவிழ்ந்த மினி வேன் மீட்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.