வீடு புகுந்து திருடிய 3பேர் கைது

முத்தையாபுரத்தில் வீடு புகுந்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-01-06 14:46 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் காஜா முகைதீன் (வயது 51). இவரது மனைவி முகமதுமீரா. சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தாழையூத்தில் உள்ள தங்களது மகள் சுனைதாவை பார்க்க சென்றிருந்தனர். அப்போது காஜா முகைதீனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரங்கள், வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து காஜா முகைதீன் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்டதாக எம்.தங்கம்மாள்புரத்தை சேர்ந்த பாக்கியம் மகன் சந்திரசேகர், இருளாண்டி மகன் கார்த்திகேயன், முத்துலிங்கம் மகன் முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்