இளம்பெண்ணின் ஆபாச படத்தை செல்போனில் பகிர்ந்த தோழி

இளம்பெண்ணின் ஆபாச படத்தை செல்போனில் பகிர்ந்த தோழி

Update: 2022-01-05 21:33 GMT
கருங்கல்:
 கருங்கலில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண், தான் குளிப்பதை ஆர்வமிகுதியில் செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் தனது தோழி சுவீட்டிக்கு அந்த குளியல் புகைப்படத்தை அனுப்பினார். தோழி இதை தனது ஆண் நண்பரான மிடாலம் 4-வது அன்பியத்தை சேர்ந்த சூசையா மகன் ஜோக்சன் என்பவருக்கு பகிர்ந்துள்ளார். இதேபோல் சிலர் ஆபாச புகைப்படத்தை மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த படத்தை வைத்துக் கொண்டு ஜோக்சன் இளம்பெண்ணுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி இளம்பெண் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சுவீட்டி, ஜோக்சன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்