பவானிசாகர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
பவானிசாகர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
பவானிசாகர்
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை சேர்ந்தவர் சிவா என்கிற ராஜா (வயது 26). இவர் தன் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள அண்ணா நகரில் குடியிருந்து வருகிறார். அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ராஜா அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், ராஜாவையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜா சிறுமியுடன் வில்லியனூரில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.