பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

சாத்தூர் அருேக பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-01-05 20:19 GMT
சாத்தூர், 
சாத்தூர் தாலுகா சிறுக்குளம் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்  நடைபெற்றது. முகாமிற்கு சாத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா மற்றும் வட்டாட்சியர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர். சிறுக்குளம், மேலச்சிறுக்குளம், மம்சாபுரம், அப்பனேரி ஆகிய கிராம பொதுமக்கள் பட்டாமாறுதல், வீட்டுமனைப்பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கேட்டு 59 மனுக்கள் கொடுத்தனர். இதில் 18 பேருக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு பட்டா மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதில் தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் முத்துஜோதிகார்த்திகேயன் மற்றும் நில அளவை பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கோவர்த்தனன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்