2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
பாளையங்கோட்டையில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.
நெல்லை:
பாளையங்கோட்டை அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் ஜோசப் குமார் (வயது 21). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை ரெயில்வே பீடர் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல் பாளையங்கோட்டை திருவனந்தபுரம் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து 2 பேரும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.