9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா
ஆரணியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம், 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
அதில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ேநற்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன், ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ரமேஷ் ஆகியோர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து கலெக்டர் பா.முருகேஷ் பள்ளிக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து, பள்ளியை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை ெசய்ய வேண்டும், என உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை 3.30 மணி அளவில் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.