விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-05 18:13 GMT
திருவண்ணாமலை

கன மழையால் பாதிக்கப்பட்ட வேளாண்மை பயிர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணை செயலாளர் ஸ்டாலின்மணி, விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.  கனமழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கிழங்கு வகைகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும், கரும்பு, வாழை பயிர்கள், தோட்டப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 

கனமழையால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் விதம் மூன்று மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

 கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர். நேற்று காலை ஆரம்பித்த காத்திருப்பு போராட்டம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. 

மேலும் செய்திகள்