மாமனார் உள்பட 3 பேர் கைது
மருமகனை தாக்கிய மாமனார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள வீலிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுருளிவேல் (வயது 27). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி புவனேஷ்வரி (22). இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் புவனேஷ்வரி கோபித்து கொண்டு, நிலக்கோட்டை அருகே உள்ள தாதகபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் தனது மனைவியை அழைத்து செல்வதற்காக சுருளிவேல் தாதகப்பட்டிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மாமனார் அழகர்சாமி, மைத்துனர்கள் கோபாலகிருஷ்ணன் (29), முருகவேல் (25) ஆகியோர் சேர்ந்து சுருளிவேலை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சுருளிவேல் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.