ஊத்தங்கரை, பர்கூரில் 2 பெண்கள் தற்கொலை

ஊத்தங்கரை, பர்கூரில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-01-05 17:21 GMT
கிருஷ்ணகிரி:
குடும்ப தகராறு
ஊத்தங்கரை அருகே உள்ள பாண்டவர்நகர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவருடைய மனைவி ராணி (வயது 42). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ராணி வீட்டில் விஷத்தை குடித்தார். 
சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
தொழிலில் நஷ்டம்
பர்கூரை அடுத்த சிகரலப்பள்ளியை சேர்ந்தவர் தாண்டவமூர்த்தி. இவருடைய மனைவி பத்மபிரியா (40). இவர்கள் நாடார்கொட்டாயில் தாபா ஓட்டல் நடத்தி வந்தனர். இந்தநிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த பத்மபிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்