முத்தையாபுரத்தில் மாட்டு வண்டி பந்தயம்

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது

Update: 2022-01-05 15:07 GMT
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் 2-ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு முத்தையாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாவட்ட தலைவர் கண்ணன், வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இந்த மாட்டு பந்தயம் இரண்டு பிரிவாக நடைபெற்றது, முதலில் பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகளும் ,சிறிய மாடு பிரிவில் 22 வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டியில் பெரியமாடு வண்டிகளுக்கு 10 கி.மீ. தூரமும், சிறிய மாட்டு வண்டிகளுக்கு 6 கி.மீ. தூரமும் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. போட்டியை தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரிய மாட்டுவண்டி பிரிவில் முதலிடத்தை ஓட்டப்பிடாரம் சரண்யாகுட்டி வண்டியும், 2-வது இடத்தை திண்டுக்கல் அய்யம்பாளையம் வண்டியும், 3-வது இடத்தை சீவலப்பேரி துர்காம்பிகா வண்டியும், 4-வது இடத்தை கச்சேரி தளவாய்புரம் சேகர் வண்டியும், 5-வது இடத்தை சங்கரபேரி கருத்தப்பாண்டி வண்டியும் பிடித்தன. சிறிய மாட்டுவண்டிகளுக்கான போட்டியில் முதலிடத்தை ராஜபதி லட்சுமணன் வண்டியும், 2-ம் இடத்தை சொக்களிங்கபுரம் காவியா ஸ்ரீ மித்ரா வண்டியும், 3-ம் இடத்தை ஓட்டப்பிடாரம் பிச்சைமணி வண்டியும், 4-வது இடத்தை வி.வேலாயுதபுரம் அந்தோணிராஜ் வண்டியும், 5- ம் இடத்தை காத்த மங்கலம் வைரமணி வண்டி பிடித்தன. வெற்றிபெற்ற பெரிய மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசுவழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்நாஜா. பா.ஜ.க. வணிகப் பிரிவு மாநில செயலாளர் சத்தியசீலன், தே.மு.தி.க. வட்டச் செயலாளர் அரச முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். சந்திரன் நன்றி கூறினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்