மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

Update: 2022-01-04 18:37 GMT
மணல்மேடு:
மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
மணல்மேடு அருகே பாலாக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன் மனைவி வள்ளி (வயது45). இவர் நேற்று முன்தினம் பாலாகுடி மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த வள்ளியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
இதுகுறித்து வள்ளியின் கணவர் கேசவன் கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓடிய சீர்காழி தாலுகா எலந்தங்குடியை சேர்ந்த இளவழகன் மகன் சுசீந்திரன் என்பரை தேடி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்