புதுப்பேட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை

புதுப்பேட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-04 17:22 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே, சித்திரைச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜா மகன் ராஜேஷ் (வயது 19). இவர் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ, 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று  காலை அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே ராஜேஷ் சென்றார். அப்போது அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரெயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், கடலூர் முதுநகர் ரெயில்வே இருப்புபாதை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 


அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்