திருப்பூண்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சார்பதிவாளர் அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய முயற்சிப்பதை கண்டித்து திருப்பூண்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய முயற்சி செய்வதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் திருப்பூண்டி கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேதையன் வரவேற்றார். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பால்ராஜ், மாவட்ட இணை செயலாளர் மீனா, மேற்கு ஒன்றிய செயலாளர் பாலைசெல்வராஜ், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் சிவா, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் சுல்தான்ஆரிபு மற்றும் அ.தி.மு.கவினர், பாரதீய ஜனதாகட்சியினர், பா.ம.க. மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகம் இடம் மாற்றும் முயற்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.