துடியலூர்
கோவை தடாகம் ரோட்டை சேர்ந்தவர் பக்தவச்சலம். இவரது மனைவி பானுமதி (வயது 59).இவர் கடந்த மாதம் 17-ந் தேதி அவரது வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது எரிந்து கொண்டிருந்த விளக்குத் தீயில் இவரது சேலையில் பட்டு தீப்பிடித்தது.
இதில் உடல் முழுவதும் கருகிய பானுமதி சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்து துடியலூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.